15 நாட்டு தலைவர்களுடன் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை!!

 
மோடி

செப்டம்பர் 9ம் தேதி நேற்று தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியுள்ளது. உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பிரதிநிதிகள் என பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிபர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். உச்சி மாநாட்டை உச்சகட்ட பாதுகாப்புடன் நடத்தி வருகிறது. அதே நேரத்தில்  3 நாட்களில் 15 நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, ஜி20 பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

மோடி எலன்


அதன்பிறகு  சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த வங்கதேசம்,   மொரீஷியஸ் பிரதமர்களுடன்  தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது குறித்து  பிரதமர் மோடி   ‘‘வங்கதேசம் - இந்தியா இடையே வர்த்தக தொடர்பு, மக்கள் தொடர்பு குறித்து பிரதமர் ஹசீனாவுடன் விரிவாக பேசினேன். இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது’’ என பதிவிட்டுள்ளர்.இந்த சந்திப்புக்கள் குறித்து பிரதமர் அலுவலகம்  ‘‘வங்கதேசம் - இந்தியா இடையே போக்குவரத்தை அதிகரிப்பது, கலாச்சாரம் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்’’ என தெரிவித்துள்ளது.

ஜி20
மொரீஷியஸ் பிரதமர்  சந்திப்பிற்கு பிறகு   ‘‘பிரதமர் ஜுக் நாத்துடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  இரு நாடுகளுக்கும் இடையில் 75 ஆண்டுகளாக தூதரக உறவு இருப்பது மிகவும் சிறப்பானது. ’’ என தெரிவித்துள்ளார்.ஜி20 உச்சி மாநாட்டில் ராவணஹதா, ருத்ரவீணை இசை: மாநாட்டு விருந்தின்போது விருந்தினர் மண்டபத்தில் இந்தியாவின் பாரம்பரிய இசைக் கருவிகளான ருத்ரவீணை, ராவண ஹதா  இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.   இந்துஸ்தானி இசைக் கலைஞர்களின் கச்சேரி மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்களின் கச்சேரியும் சிறப்பாக நடந்தேறியது. இந்த இசை நிகழ்ச்சிகளை உலக நாடுகளின் தலைவர்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web