ஜி 20 மாநாட்டில் தங்கத் தட்டு வெள்ளி டம்ளரில் உணவு வகைகள்!!

 
தங்கத் தட்டு வெள்ளி டம்ளர்

நடப்பாண்டின் ஜி20 மாநாடுகளை ஏற்றும் நடத்தும் பொறுப்பை இந்தியா மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வந்த ஜி20 மாநாட்டுக்கு பிறகு தற்போது  ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 9 மற்றும் 10 ம் தேதிகளில் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு தலைநகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள்,  வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.  

வெள்ளி டம்ளர்
கடந்த சில மாதங்களாகவே, உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க டெல்லியில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக  இந்தியாவின்  விருந்தோம்பல் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில்  உலக தலைவர்களுக்கு வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் உணவுகள் பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.  இதற்காக தங்க முலாம் பூசப்பட்ட, வெள்ளியால் ஆன தட்டுகள், குவளைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.ஜி20 பிரதிநிதிகளுக்கு உணவு பரிமாறப்படும் வெள்ளிப் பாத்திரங்கள் கலைநுணுக்கத்துடன் தயாராகியுள்ளன.

 200க்கும் மேற்பட்ட கைவினைஞர்களால் சுமார் 50,000 மணி நேரத்தில்   சுமார் 15,000 வெள்ளிப் பொருட்களை இதற்காக வடிவமைத்துள்ளனர்.  இதனை உலோகப்பொருள் நிறுவனமான ஐரிஸ் தெரிவித்துள்ளது.  இதன்படி விருந்தினர்களுக்கு உணவை வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள பொருட்களை   நிறுவனம் டெல்லியில் காட்சிப்படுத்தியது. 
பெரும்பாலான பாத்திரங்கள் எஃகு அல்லது பித்தளை கொண்டு வடிவமைக்கப்பட்டு  வெள்ளி பூச்சும் பூசப்பட்டுள்ளது.

ஜி20

 வரவேற்பு பானங்கள் தங்க முலாம் பூசப்பட்ட டம்ளர்களில் பரிமாறப்படும் என்றும் ஐரிஸ் நிறுவனம் கூறியுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட  G20 பிரதிநிதிகளுக்கு சேவை செய்வதற்காக தேசிய தலைநகரில் உள்ள பல்வேறு சொகுசு ஹோட்டல்கள் வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உணவு பரிமாறும் பொருட்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டன .  பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பு பிரபல ஐடிசி ஹோட்டலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெருவோர உணவு மற்றும் தினை சார்ந்த உணவுகள் இந்த உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக   ஜி20 செயலகம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web