ஜி20 உச்சி மாநாடு... கோலாகலமாக களைகட்டத் தொடங்கும் தலைநகர்!!

 
ஜி20

நாளை செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில்  ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.  இதற்காக தலைநகர் முழுவதும்   உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் முக்கிய இடங்களில் ஒன்றான ஜமா மஸ்ஜித், வண்ண விளக்குகள் மற்றும் வண்ணக் குடைகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.  

ஜி20

இங்கு  பல வெளிநாட்டு தலைவர்கள் வர உள்ள நிலையில் மொழி பெயர்ப்பு உதவிக்கு 100 பெண் தொழில் முனைவோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.டெல்லியில் மயூர் விஹார்,அக்சர்தாம், ஐடிஓ  பகுதிகளில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. கவ்தல்யா மார்க்,சானக்யபுரி   பகுதிகளில் தேசிய பறவை, விலங்கு வடிவங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டல் மூவர்ண வண்ண விளக்குகளால்  ஜொலிக்கிறது.

ஜி20

டெல்லி விமான நிலையத்திலேயே நடனக் கலைஞர்களுக்கு பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டர் லேயன் தலைநகரில் இறங்கியதும்   அவரை  மத்திய அமைச்சர் அனுபிரியா படேல் வரவேற்றார். பிரத்யேக மேடையில் நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.  அதனை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உற்சாகமாக கண்டு ரசித்தார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web