தமிழகத்துக்கு 3 வது இடம்... கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு... !

 
கேலோ

இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையைல்  மாநிலங்களுக்கு இடையேயான   கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி ஜனவரி 19ம் தேதி தொடங்கி வைத்தார்.  இதனையடுத்து சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை  நகரங்களில்  இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில்  கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம்   விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன. தமிழகம்  சார்பிலும் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடினர்.  தமிழகம்  இதுவரை 35 தங்கம், 20 வெள்ளி மற்றும் 36 வெண்கலப்பதக்கங்களுடன் 3 வது இடத்தில்இருந்து வருகிறது.   நேற்று மட்டும் தமிழகத்திற்கு 6 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கேலோ
பெண்களுக்கான 200 மீட்டர் மெட்லே பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஸ்ரீநிதி நடேசன்  தங்கப்பதக்கம் வென்றார்
ஆண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் நீச்சல் பிரிவில் சென்னை  நித்திக் நாதெல்லா   தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.  
டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் இறுதிசுற்றில் தமிழகத்தின் பிரனவ்- மகாலிங்கம் ஜோடி   தங்கப்பதக்கம் வென்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவிலும் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி- லட்சுமி பிரபா கூட்டணி தங்கத்தை வென்றது.
பளுதூக்குதலில் பெண்களுக்கான 81 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் ஆர்.பி. கீர்த்தனா ஸ்னாட்ச் முறையில் 85 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 103 கிலோ என மொத்தம் 188 கிலோ தூக்கி புதிய தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.  
பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் வினயக்ராம்- ஸ்வஸ்திக் ஜோடி,  டெல்லி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. 

கேலோ
பதக்கப்பட்டியல்:


ரேங்க்  மாநிலங்கள்    தங்கம் வெள்ளி வெண்கலம்    மொத்தம்
1           மகாராஷ்டிரா     53              46             51                      150
2           ஹரியானா          35               22             46                      103
3           தமிழ்நாடு            35               20              36                      91
4           டெல்லி                  13                18              24                    55
5          ராஜஸ்தான்          13                16             16                    45
 
 கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த கேலோ   இந்தியா விளையாட்டு போட்டிகள், இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று கால்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் மற்றும் நீச்சல்    போட்டிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web