விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்!

 
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்!

செங்கோட்டையில் விநாயகர் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நாடு முழுவதும் வரும் செப்-7ம் சனிக்கிழமை  விநாயகர் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவதை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்காக செங்கோட்டை வேளாளா் தெருவில் மண்பாண்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தில் வைத்து சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படத வகையில் களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகளை மண்பாண்ட தொழிலாளா்கள் மும்மரமாக செய்து வருகின்றனா். 

இது குறித்து சங்கத்தலைவா் ஆறுமுகம் வேளாளர் கூறுயதாவது இந்த சிலைகள் குறைந்த விலை. ரூ.500 முதல் 20ஆயிரம் வரை 7அடி உயரம் கொண்ட விநாயகா் சிலை ரூ.20ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தயாரிக்கும் பணிகளை நாங்கள் ஆண்தோறும் செய்து வருகிறோம் மேலும் இந்தாண்டு பல்வேறு வகையான வடிவத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் முழுவதும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவைகளால் அமைக்கப்பட்டது. 

இதில் ரசாயண கலவை ஏதும் கிடையாது இந்த சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது தண்ணீர் மாசுபடியாது மேலும் பணத்திற்கு தகுந்தபடி சிறு சிறு வர்ணம் பூசாத சிலைகளும் சிறுவர்களுக்கு கேட்டும் விதம் செய்து கொடுக்கிறோம். இந்த தொழிலில் வேலைக்கு ஏற்றபடி தொழிலாளா்களுக்க ஊதியம் கிடைப்பது இல்லை. உபயோகப்படுத்தும் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலைப்பாடுகள் அதிகம் இருந்த போதிலும் இப்பணிகளை இறைப்பணியாக நினைத்து மனதுக்கு ஆறுதலுடன் காலகாலமாக செய்து வருகிறோம் என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web