இன்று விநாயகர் சிலை ஊர்வலம்... 18000 போலீசார் குவிப்பு!!

 
விநாயகர்

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 18ம் தேதி திங்கட்கிழமை  விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீதிகள் தோறூம்  பிரம்மாண்ட சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இன்றும், நாளையும் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் உயர்நீதிமன்றம்

அதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர். இன்றைய தினம் பாரதிய சிவசேனா அமைப்பினரும், நாளைய தினம் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உட்பட   பல்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள கடற்கரை நீர்நிலைகளில் கரைக்கவுள்ளனர். இந்நிலையில், சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்கலாம் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர்


அமைதியான முறையில்  விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னையில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் மூலம் தகுந்த  சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வு அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியான முறையில் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web