பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை..!!

 
விநாயகர்

இந்தியா  முழுவதும் நாளை செப்டம்பர் 18ம் தேதி திங்கட்கிழமை  விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு   விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு,  ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.சிலை தயாரிப்பு குறித்து  பாளையங்கோட்டை பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்

விநாயகர்

அதில், “பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனம் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதால் அவற்றை கரைக்கும் போது, நீர் நிலைகள் மாசடையலாம். இதனால்  விநாயகர் சிலைகளை விற்க அனுமதி மறுக்கப்படுகிறது.  நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. எனவே, விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்திருந்தார்.  

விநாயகர் உயர்நீதிமன்றம்
இந்த மனு மீதான விசாரணையில்   மனுதாரர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி செய்யப்பட்ட சிலைகளை விற்பனை செய்கிறார். இதற்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.  பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. ஆனால், அந்த சிலைகள் விற்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க முடியாது. சிலை விற்பனையை தடுப்பது  உரிமை மீறலாகும். எனவே, மனுதாரரின் சிலை விற்பனை செய்ய அதிகாரிகள் தடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். 
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவின் மீதான விசாரணையில்  பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  விஷம் என்பதில் ஒரு துளி விஷம் அதிக விஷம் என்பது இல்லை, எல்லாமே விஷம்தான்; இவ்வகை சிலைகள் தயாரிக்கவும், விற்கவும் கூடாது என    இரு நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web