பகீர்.... பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்!
இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ மாணவிகளே அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறை, சமூக வலைதளங்களில் , போதை பொருட்கள் என ஏதாவது ஒரு காரணத்தால் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
டெல்லியில் தனது நண்பரை சந்திக்க சென்ற 15 வயது சிறுமியை மூன்று சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர். தலைநகர் டெல்லியின் தென்மேற்கில் அமைந்துள்ள கபஷேராவைச் சேர்ந்த 15 வயது மாணவி சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரைப் பார்க்கச் சென்றார். அப்போது அவரது நண்பர்கள் இருவர் அந்த வீட்டில் இருந்தனர். மூவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தான் கொடூரத்தின் உச்சம்.
இந்நிலையில், சிறுமியிடம் கேலியாக பேசிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மூவரும் அந்த பெண்ணை அங்கிருந்து துரத்தினர். வீட்டிற்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில், மூவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தாக்குதல் குறித்து யாரிடமாவது கூறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியதாகவும் கூறியதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் தலைமறைவான 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!