நைரோபி எரிவாயு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 2 பேர் பலி.. 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

 
நைரோபி எரிவாயு வெடிப்பு

கென்யாவின் தலைநகரான நைரோபியில் எரிவாயு வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 200 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைரோபியின் எம்பகாசி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நிரப்பும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது, கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஐசக் மைக்வா மவாரா தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 2024 பிப்ரவரி 1ம் தேதி இரவு 11.30 மணியளவில் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது துணிகள் மற்றும் ஜவுளி விற்பனை செய்யும் குடோன் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர். இதுக்குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gas explosion in Kenya's Nairobi kills 2, injures 300: 'A flying gas  cylinder hit...' | Mint

மேலும், இந்த விபத்தில் நைரோபி வெஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சக கென்யா நாட்டினர் உயிரிழந்தனர்.  இது தவிர, 222 கென்யா மக்கள் தீ விபத்தில் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web