கேட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு தேதி தள்ளி வைப்பு... புதிய தேதி அறிவிப்பு!

 
gate exam

வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெறும் Graduate Aptitude Test in Engineering (GATE) நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு அறிவிக்கப்பட்டபடி நவம்பர் 5ஆம் தேதி ஹால்டிக்கெட் வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டிருந்ததை கோழிக்கோடு ஐஐஎம் மாற்றியுள்ளது.

மாணவிகள்

புதிய அறிவிப்பின் படி, தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை நவம்பர் 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என ஐஐஎம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. iimcat.ac.in இணையதளத்தில் ஹால்டிக்கெட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 170 மையங்களில், காலை 8.30–10.30, மதியம் 12.30–2.30, மாலை 4.30–6.30 என மூன்று அமர்வுகளாக கேட் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 2.9 லட்சம் பட்டதாரிகள் இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு

தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் எனவும், தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் தொடர்ந்து அறியலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?