10 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு... பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி!

 
புவிசார் குறியீடு

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2024-25 ம் நிதியாண்டிற்கான  பொதுபட்ஜெட் பிப்ரவரி 19ம் தேதி, வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 20ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்திருந்தார். இதில் விவசாயிகள் பயனடையும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக  10 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன் படி 
“சத்தியமங்கலம் செவ்வாழை,
கொல்லிமலை மிளகு,
மீனம்பூர் சீரக சம்பா,

புவிசார் குறியீடு
ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை,
உரிகம் புளி,
புவனகிரி மிதி பாகற்காய்,
செஞ்சோளம்,

புவிசார் குறியீடு
திருநெல்வேலி அவுரி இலை,
ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை,
செங்காந்தள் விதை
ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.   தமிழகத்தில் வேளாண் பட்ஜெட்டில் இதற்காக 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வேளாண் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web