கல்யாணமாகி 6 மாசம் தான்... இளம்பெண் தூக்கிட்ட்டு தற்கொலை!!

 
திவ்யா

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் வசித்து வருபவர்   ஆறுமுகம் .இவரது மகள் திவ்யா. இவருக்கு அவ்வை நகர் பகுதியில் வசித்து வரும் ராஜாவின் மகன் ஹரிஷுக்கும்   கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஹரிஷ் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விசேஷத்திற்கு உணவு பரிமாறும் வேலைக்கு ஹரிஷ் சென்றிருந்தார்.  

தற்கொலை

இந்த நேரத்தில்  திவ்யா வயிற்று வலியால் துடித்தார். இதனால்   மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பலமுறை ஹரிஷுக்கு திவ்யா போன் செய்து பார்த்துள்ளார். பந்தி பரிமாறும் வேலை என்பதால் ஹரிஷ்  போனை எடுக்கமுடியவில்லை. இதனால்  மனம் உடைந்த திவ்யா வீட்டில் தூக்குமாட்டி  தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
பின்னர் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் வீடு திரும்பிய ஹரிஷ் வீட்டை தட்டிப்பார்த்தார்.   நீண்ட நேரம் வீட்டை திறக்காததால் மனைவி கோபத்தில் இருப்பதாக நினைத்து   கொண்டு வேலை செய்த களைப்பில் தூங்கிவிட்டார்.   திவ்யாவின் மாமியார் செல்வி நீண்ட நேரம் ஆகியும் திவ்யா தூங்கிக் கொண்டிருக்கிறார் என நினைத்து திரும்பவும் கதவை தட்டி உள்ளார். 

ஆம்புலன்ஸ்
ஆனாலும், கதவு திறக்காத காரணத்தால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  காவல் துறையினர் திவ்யாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஹரிசை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் அருகே திருமணமான  6  மாதத்தில் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web