பெரும் சோகம்... விபத்தில் உயிரிழந்த காதலன்... காதலி விஷம் குடித்து தற்கொலை... !!

 
அகில் பிரியா

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி  மோளையானூர் கிராமத்தில் வசித்து வருபவர்  அகில் பிரியா. இவர்  கோவை  தனியார் மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும்  அவரது உறவினரான கட்டரசம்பட்டியில் வசித்து வரும்  ஸ்டாலினும் காதலித்து வந்தனர்.  தீபாவளிக்கு அகில் பிரியா, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அகில் பிரியா பின்னர் பண்டிகை முடிந்ததும் கோவை செல்வதற்காக நவம்பர் 14ம் தேதி சென்றார்.  தன் காதலனைச் சந்திப்பதற்காக   போன் செய்து சேலம் வரச் சொன்னார். அவர்   தனது இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு வந்தார்.  அந்த சமயத்தில் சேலத்தில் ஒரு விபத்தில் சிக்கி ஸ்டாலின்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனையறிந்த அகில்பிரியா சோகத்துடன் வீட்டில் இருந்து வந்தார்.  
ஆம்புலன்ஸ்தன்னைப் பார்க்க வரும் போது  காதலன் விபத்தில் இறந்த சோகத்தை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த  அவர் நேற்று  விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.  அவரது உறவினர்கள் அவரை மீட்டு  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி அகில் பிரியா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web