3 வருடக் காதல்... காதலி சராமாரியாக குத்தி கொலை !! கதறித் துடித்த பெற்றோர்!!

 
சத்திய ஸ்ரீ

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் வசித்து வருபவர்  மணிவண்ணன். இவரது மகள் சத்தியஸ்ரீ.  இவர் திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோட்டில் தனியார் மருத்துவமனையில்  பணிபுரிந்து  வந்தார். இந்நிலையில், சத்தியஸ்ரீக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியில் வசித்து வரும்  நரேந்திரனுக்கும்  இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.    இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, நரேந்திரனும் சத்தியஸ்ரீயும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
 இவர்களது காதலில், காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதில், நரேந்திரனுக்கும் சத்தியஸ்ரீக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  

ஆம்புலன்ஸ்

நண்பர்கள்  நரேந்திரன் சத்தியஸ்ரீயின் சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். இருந்தபோதிலும், இவர்களுடைய 3 ஆண்டுகால பழக்கத்தில் பல்வேறு சர்ச்சைகள் மோதல்கள் இருந்தன.  கடந்த சில நாட்களாக நரேந்திரனுக்கும் சத்தியஸ்ரீக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒருகட்டத்தில், சத்தியஸ்ரீ நரேந்திரனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதனால் விரக்தியடைந்த நரேந்திரன், சத்தியஸ்ரீ செல்லும் இடமெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார்.  ஆனால், சத்தியஸ்ரீ அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. இதற்கிடையில், நரேந்திரனுக்கு தன் காதலியான சத்தியஸ்ரீ மீது ஏற்பட்டிருந்த கோபம், ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியது. அதன்படி, செப்டம்பர் 1ம் தேதி காலை 9 மணியளவில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் கிளம்பி வேலைக்கு வந்துள்ளார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நரேந்திரன் தன்னைக் காதலிக்கும்படி  கூறினார். 


அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, சத்தியஸ்ரீயும் தான் வேலை செய்யும் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார்.  ஆத்திரமடைந்த நரேந்திரன்   மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, மருத்துவமனைக்குள் புகுந்து சத்தியஸ்ரீ கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதையடுத்து, படுகாயமடைந்த சத்தியஸ்ரீ சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்தார்.  அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்ட நேரத்தில், நரேந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் . சத்தியஸ்ரீயை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்

சத்தியஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் தெரிவித்தனர். மேலும், இதைக் கேட்ட சத்தியஸ்ரீயின் பெற்றோர் கண்ணீர்விட்டுக் கதறி  அலறித் துடித்தனர். உயிருக்குப் போராடிய நரேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சத்தியஸ்ரீயின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   நரேந்திரன் கழுத்தை அறுத்துக் கொண்டதால் அவரால் தற்போது பேச முடியவில்லை. அவர் பேசினால் தான் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் குறித்த தகவலை அறிய முடியும் என  போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web