தமாக பாஜகவுடன் இணைந்தது... பரபரக்கும் தொகுதி பங்கீடு!

 
தமாக பாஜக

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதி என அரசியல் கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. இதனால் அரசியல் வட்டாரத்தில் கட்சி தாவல், ஒருங்கிணைவு பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. மத்தியில் தற்போது 2 முறையாக பாஜக சார்பிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இதனை  வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்தன. இருப்பினும் இக்கூட்டணியில் கடந்த சில நாட்களாக மாறி மாறி பல்வேறு அரசியல் சதுரங்க நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் கூட்டணியில் கட்சிகளுக்கிடையே  உட்கட்சி பூசல் உருவாகியுள்ளது.

தமாக பாஜக

இதனால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை  திமுக,  கூட்டணியில்  காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக  ட கட்சிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மற்றொரு புறம்  அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில்   பாஜக  பாமக, தேமுதிக , தமாக  கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  இருப்பினும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தமாக பாஜக

இது குறித்து  தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர்  ஜி.கே.வாசன்,  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பாஜக விரும்புகிறது;  பாஜகவின் செயல்பாடுகளை தமிழ்நாட்டில் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்;  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களின் பொருளாதாரம் உயரும்; இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்ற பாஜக அரசு பாடுபட்டு வருகிறது; கிராமம் முதல் நகரம் வரை பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதே  பாஜகவின் நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டு” எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web