சீக்கிரமா வீட்டிற்கு செல்லுங்க... அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை!

 
இன்று வடகிழக்கு பருவமழை  தொடக்கம்!      நம்ம மாவட்டத்திற்கு கனமழை !

வெளியே எங்கேயாவது வேலை விஷயமாக இருந்தால், சீக்கிரமா வேலையை முடித்து விட்டு, பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்க. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவி வரும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rain

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை மறுதினம் வாக்கில் உருவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகா தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

மேலும் விழுப்புரம், மயிலாடுதுறை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web