கத்திகளால் கட்டப்பட்ட படிக்கட்டில் ஏறி சாமி தரிசனம்...!!

 
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம்  திருக்கழுக்குன்றம் பகுதியில் பிரசித்தி பெற்ற  ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்  அமைந்துள்ளது. இங்கு 14 வது ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில்  அம்மன் அருளைப் பெறுவதற்காக   முழுக்க முழுக்க கத்திகள் பொருத்தப்பட்ட ஏணியின் மீது ஏறிச் சென்று பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

செங்கல்பட்டு

இந்த திருவிழாவில், கத்திகள் பொருத்தப்பட்ட ஏணி மீது ஏறிச் சென்று அம்மனை வழிபடும் முறை கடைப்பிடிக்கப்பட்டது.இதற்காக கோயிலின் எதிரில் ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, 11 படிகள் கொண்ட கத்திகளால் செய்யப்பட்ட ஏணி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒவ்வொரு படியிலும் நீளமான கத்தி இணைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் ஒவ்வொரு படியாக ஏறிச்சென்று  உச்சியை அடைந்தனர்.  

செங்கல்பட்டு


உச்சியை அடைந்ததும் தலை குனிந்து வணங்கி கீழே இருக்கும் மக்களை நோக்கி பூக்கள், இனிப்புகள் மற்றும் பழங்களை   வீசினர்.  பூக்கள் இனிப்புக்கள் ஆகியவை ஒரு கயிறு மூலமாக கூடை உச்சியில் இருக்கக்கூடிய நபரிடம் அனுப்பப்பட்டு அவைகள் கொடுக்கப்பட்டன.   இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் ஏறி வழிபாடு செய்தனர்.
இந்த திருவிழாவில் செங்கல்பட்டு மற்றும்   சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பங்குபெற்று கடவுளை வழிபாடு செய்தனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web