துப்பாக்கில் சுடுதலில் மேலும் ஒரு தங்கம்... பதக்கங்களை அள்ளும் இந்தியா!!

 
சிப்ட் கௌர் சாம்ரா

சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள்  ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து  45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  இன்று  5வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில்  இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 18பதக்கங்களை வென்று குவித்துள்ளது.  

இந்தியா தங்கம்

பதக்க பட்டியலை பொறுத்தவரை இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது.   50மீ ரைபிள் 3 பொசிஷன் பெண்கள் அணியில் இறுதிப்போட்டியில் சிஃப்ட் கௌர் சாம்ரா 469.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.   சீன வீராங்கனை 462.3 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனை ஆஷி சோக்ஷிக் 451.9 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

ஹாக்கி மகளிர் ஆசிய கோப்பை
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங், மனு பாக்கர், ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web