தங்கம் சவரன் ரூ.90,000யை நெருங்குது... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
தங்கம்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், விரைவில் ரூ.90,000 யை சவரன் தொட்டு விடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சமீப காலங்களாக காலை மாலை என தினமும் இருமுறை தங்கத்தின் விலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. நேற்றும் காலையில் சவரனுக்கு ரூ.880 தங்கம் விலை குறைந்த நிலையில், மாலையில் விலை உயர்ந்துள்ளது.

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

தொடர்ந்து தங்கம் விலை உச்சத்திலேயே பயணித்து வரும் நிலையில், கடந்த 1ம் தேதி முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக அடுத்த நாளான நேற்று முன் தினம் காலை சற்று குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் அதிகரித்தது. 

நேற்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880-ம், கிராமுக்கு ரூ.110-ம் அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.86,720-க்கும், ஒரு கிராம் ரூ.10,840-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. 

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.87,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?