காலையில் ஏறிய நிலையில் மாலையில் இறங்கிய தங்கம்!
தங்கத்தின் விலை இன்று (அக். 21) மாலை சந்தையில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்த நிலையில் பிற்பகலில் விலை சற்று குறைந்துள்ளது. சென்னை சந்தையில் தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.6 குறைந்து ரூ.182க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வெள்ளி ரூ.188க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. தங்கம் கடந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சவரன் ரூ.97,600 வரை சென்று புதிய உச்சத்தை தொட்டது.வாரத்தின் இறுதியில் விலை மாற்றங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன. சனிக்கிழமை தங்கத்தின் விலை ரூ.1,600 குறைந்தது, தீபாவளி நாளான நேற்று ரூ.640 குறைவு ஏற்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
