1.11 லட்சம்.... 24 காரட் தங்கத்தில் ஸ்பெஷல் இனிப்பு ‘சுவர்ண பிரசாதம்’ அறிமுகம்...!
ஜெய்ப்பூரில் உள்ள பிரபல சுவீட்ஸ் கடையில், முழுக்க முழுக்க 24 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் தயாரிக்கப்பட்ட ‘சுவர்ண பிரசாதம்’ இனிப்பு வெளியிடப்பட்டது. இதில் தங்கம் மட்டுமல்லாமல், குங்குமப்பூ, பாதம், பிஸ்தா போன்ற உயர்தர பொருட்களும் சேர்க்கப்பட்டு, வண்ணமயமான அழகான வடிவமைப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த இனிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மர பெட்டியில் வழங்கப்படும் என கடை உரிமையாளர் தெரிவித்தார். விலை ரூ.1,11,000 ஆகும். அதே கடையில் 24 காரட் தங்கம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிஸ்தா லோஞ்ச், காஜு கட்லி மற்றும் லட்டு போன்ற பிற ஆடம்பர இனிப்புகளும் விற்பனைக்கு உள்ளது.

தீபாவளி பரிசளிப்பில் செல்வந்தர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு புதிய பரிசு கலாசாரத்தை வழங்கும் வகையில், பாரம்பரிய இந்திய இனிப்புகளை ஆரோக்கியம் மற்றும் ஆடம்பரத்துடன் இணைக்கும் முயற்சியாக ‘சுவர்ண பிரசாதம்’ இனிப்பு அறியப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
