ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்....!! களைக்கட்ட தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்!!

 
ரஜினி ஜெய்ஷா

2023 ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5 ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பிரபலங்களுக்கு 'கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள்  துறை வாரியாக சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


 

அந்த வகையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த கோல்டன் டிக்கெட் சமீபத்தில் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து  உலக கோப்பை போட்டிகளை கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி கௌரவித்துள்ளார்.

ரஜினி

இது குறித்து பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், 'கலை, பண்பாடு மூலமாக ரசிகர்களின் மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற நடிகர் ரஜினிகாந்த் உலகக்கோப்பை போட்டிக்கான விருந்தினராக வரவேற்பதில் மகிழ்ச்சி' எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web