சன்னி லியோனுக்கு கோல்டன் விசா...!!

 
சன்னிலியோன்

சாதனையாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு   கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்கள்.  இந்த விசாவை இந்திய நடிகர்கள் பலர் பெற்றுள்ளனர்.  இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ப்ருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.


சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோரும் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.   2021ல்  ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை த்ரிஷா பெற்றார். அவரை தொடர்ந்து ஆர்.பார்த்திபனுக்கு இந்த விசா  வழங்கப்பட்டது.இந்நிலையில், பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை அறிவித்துள்ளது.  

சன்னி லியோன்

இதன் அடிப்படையில்  துபாயில் உள்ள மிகப்பெரிய அரசு சேவை வழங்குநரான இசிஎச் டிஜிட்டலின் தலைமையகத்தில்   சன்னி லியோன் தனது விசாவைப் பெற்றுள்ளார்.  
இசிஎச் சிஇஓ இக்பால் மார்கோனியிடம் இருந்து 10 வருட கால அனுமதி கொண்ட கோல்டன் விசாவுடன் கூடிய பாஸ்போர்ட்டை சன்னி லியோன் பெற்றார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகாரத்திற்கு சன்னிலியோன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web