குட் நியூஸ்.. அதானி குழுமம் இன்னும் வாங்குவதற்கு தகுதியான நிறுவனம் தான்! ஜேபி மோர்கன் அதிரடி!

 
அதானி

அமெரிக்காவின் ஹிட்டன்பர்க் அறிக்கை வெளியானதைத்தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அதானி பங்கு விற்பனை கடுமையான சரிவுகளை சந்தித்தது. இந்நிலையில் இந்தியாவின் அதானி குழுமம், CEMBI, JACI மற்றும் JESG குறியீடுகளுக்குத் தகுதி பெற்றுள்ளது என்று ஜேபி மோர்கன் திங்களன்று ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது. "தற்போதைய குறியீட்டு விதிகளின்படி, அதானி குழும நிறுவனங்கள் CEMBI, JACI மற்றும் JESG குறியீடுகளில் சேர்ப்பதற்கு தகுதியுடையதாகவே இருக்கும்" என்று JP Morgan குறிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஜேபி

"பொதுவில் கிடைக்கும் தகவல் மற்றும் பத்திரங்களின் பணப்புழக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மேலும் சந்தை சீர்குலைவு அல்லது உறுதிப்படுத்தப்பட்ட இயல்புநிலை நிகழ்வின் போது." அதானி குழுமத்தின் வணிகங்களில் துறைமுகங்கள், மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடங்கும், CEMBI மற்றும் JACI குறியீடுகளில் மொத்தம் 7.7 பில்லியன் டாலரைக்கொண்டுள்ளது.

அதானி

கார்ப்பரேட் எமர்ஜிங் மார்க்கெட் பாண்ட் இன்டெக்ஸ் சீரிஸ் (CEMBI) வளர்ந்து வரும் சந்தை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனைக் கண்காணிக்கிறது. J.P. மோர்கன் ஆசியா கிரெடிட் இண்டெக்ஸ் (JACI) ஆசிய நிலையான-விகித டாலர் பத்திரச் சந்தையின் மொத்த வருவாய் செயல்திறனைக் கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இன்று தற்பொழுதைய நிலவரப்படி அதானி குழும பங்குகளில் சிலவற்றில் ஏற்றம் காணப்படுகிறது. குறிபாக அதானி டோட்டல் கேஸ், அதானி பவர் ஆகியவை மட்டுமே வர்த்தகத்தில் சிவப்பு வண்ணத்தில் காட்சி தருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்

From around the web