இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!

 
சீருடை
  


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டி, கணித உபகரணப் பெட்டிகள் , புத்தகப்பை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

மாணவிகள்

ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்து விட்ட நிலையில் பாடப்புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.  வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்தவுடன் பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்து சுமார் ஒன்றரை மாதம் ஆகிவிட்ட நிலையில் இதுவரை சீருடைகள் மற்றும் காலணி போன்ற பொருள்கள் எதுவும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் ஜூலை 29 முதல் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவிகள்

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு  மாணவர்களின் சரியான அளவுகளை கணக்கெடுத்து சீருடை மற்றும் காலணிகள் கொள்முதல் செய்யப்படுவதால் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.  ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் புத்தகப்பை மற்றும் வண்ண பென்சில்கள் போன்றவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!