ஜியோ சிம் பயனர்களுக்கு கூகுளின் அதிரடி ஏஐ சலுகை... ஜெமினி புரோ இலவசம்!

 
ஜியோ ஜெமினி

செயற்கை நுண்ணறிவு துறையில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், கூகுள் நிறுவனம் புதிய சலுகையுடன் ஜியோ வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கூகுளின் ஏஐ உரையாடல் தளம் ஜெமினி புரோ பதிப்பை ஜியோ சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக, ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த இலவச சேவையை 1½ ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் ஜெமினி ஏஐ

இதற்கு முன்பு, சாட் ஜி.பி.டி தனது ‘ப்ரோ’ பதிப்பை புதிய பயனர்களுக்கு 1 ஆண்டுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, கூகுள், பர்பிளெக்ஸ்சிட்டி ஏஐ மற்றும் டீப்சிக் போன்ற நிறுவனங்களுடன் போட்டியை சமாளிக்க இந்த புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ 3500 அட்டகாசமான ஸ்மார்ட்போன்! ஜியோ அதிரடி அறிமுகம்!

ஜியோ வாடிக்கையாளர்களுக்கான இந்த சலுகை விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப வட்டாரங்களில் இதனால் இந்தியாவில் ஏஐ பயன்பாடு இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?