கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் இருந்து குதித்த ஓட்டுனர் பலி!!

 
பேருந்து விபத்து


தேனியிலிருந்து  மதுரை செல்லும் பேருந்துகள் தேனிக்கு அடுத்து ஆண்டிப்பட்டி , உசிலம்பட்டி , செக்கனூரணி என 3 நிறுத்தங்கள் தான் . வழியில்  வேறு எங்குமே பெரும்பாலும் பேருந்துகள் நிற்காது.  உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி இடையே பேருந்துகள் மிக அதிக வேகத்தில் செல்வதால் விபத்துக்களும் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகி விட்டது.  மதுரையில் இருந்து தேனிக்கு அரசு பேருந்து ஒன்று  30 பயணிகளுடன்   புறப்பட்டுச் சென்றது.

விபத்து

ஆண்டிபட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தான் மட்டும் உயிர் பிழைப்பதற்காக பேருந்து ஓட்டுனர் வெளியே குதித்தார். இதில்   பேருந்து ஓட்டுநர் தங்கபாண்டியன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து  முள்வேலியில் மோது  சிறு சேதத்துடன் நின்றுவிட்டது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்   ஓட்டுநரின் உடலை கைப்பற்றி  தேனி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web