அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை!

 
அரசு

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் வசித்து வந்த ஈஸ்வரி என்ற தலைமை ஆசிரியர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

ஈஸ்வரி, பொள்ளாச்சியில் உள்ள வெங்கட்ரமணன் வீதி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியாக பணியாற்றி வந்தார். வெற்றிவேல் என்பவரது மனைவியான இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று, வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இவரது மகன் அதனை முதலில் கண்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவசரமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ்

முதற்கட்ட விசாரணையில், வீட்டுக்காக மற்றும் மகன்களின் கல்வி செலவுக்காக எடுத்திருந்த கடனின் சுமை காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும், வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த தற்கொலை சம்பவம் கல்வி துறையிலும், அந்த பகுதியில் உள்ள மக்களிடையிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?