பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு.. கலெக்டரும் பங்கேற்கவில்லை!
நாகூரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Join us live for the 9th Annual Convocation of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam where Governor-Chancellor Thiru R. N. Ravi confers degrees, medals and certificates upon the graduating students. Dr. C. N. Ravishankar, Director, ICAR-Central…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 18, 2024
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தார். வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 9வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழைப்பிதழில் பெயர் இல்லாததால் நாகை மாவட்ட ஆட்சியரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. நேற்று உப்பு சத்தியாகிரக நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் ஆளுநருடன், மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
