+2 தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை... 6,244 பணியிடங்கள்!

 
டிஎன்பிஎஸ்சி

12ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கான அசத்தலான வாய்ப்பு. முழு முயற்சியுடன் இந்த தேர்வுக்கு தயாராகி வந்தால், நிச்சயமாக சாதிக்கலாம். லட்சக்கணக்கானோர் எழுதுவார்கள் என்று நினைக்காமல், நம்பிக்கையுடன் இந்த தேர்வுக்கு தயாராகி, வெற்றி வாய்ப்பைப் பெறுங்க. TNPSC நிர்வாகம் பதவி, பணியிடங்கள்,தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்புகள், விண்ணப்பங்களை வெளியிட்டு தேர்வுகளை நடத்தி அதன் மூலம்  பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த அறிவிப்பின்படி, மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படும். ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இதற்காக  விண்ணப்பதாரர்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர் உட்பட பல பதவிகளில் வேலை பெற ஒரு பொன்னான வாய்ப்பு இது. 

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பிப்ரவரி 28 வரை சமர்பிக்கலாம். தங்களது விண்ணப்பங்களில் மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 6 ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மேலும் விரிவான தகவலுக்கு, அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பார்க்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி

இதன் கீழ்  நிர்வாக அதிகாரி, வனக் காவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2024 அன்று குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதே சமயம், அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web