வீடியோ... என் பரம்பரையில புதுக்கார் வாங்குனவன் நான் தான்!! கெத்து காட்டும் ஜிபிமுத்து!!

 
ஜிபி முத்து

விஜய்தொலைக்காட்சியில் பிக்பாஸ், குக் வித் கோமாளி  நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர்  ஜிபி முத்து.இவர்  தொடக்கத்தில் யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஃபாலோயர்களால் பிரபலமான   ஜி.பி.முத்து, பின்னர் பிக் பாஸ் சீசன் 6ல்  கலந்து கொண்டார்.  களமிறங்கிய இவருக்கு முதல் வாரத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தன்னுடைய குடும்பத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை எனக் கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.  அஜித்தின் துணிவு, சன்னி லியோன் உடன் ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி வீடுதோறும் குடும்பத்தில் ஒருவரானார்.  

ஜிபிமுத்து


இந்நிலையில்   புதிதாக கியா கேரன்ஸ் காரை வாங்கியிருப்பதாக பதிவிட்டுள்ளார். இதுவரை பழைய காரை பயன்படுத்தி வந்த ஜி.பி.முத்து, பரம்பரையிலேயே புது கார் வாங்கிய முதல் ஆள் நான் தான் என நெகிழ்ச்சியுடன் அதில் பதிவிட்டுள்ளார்.  புது காரில் தனது குடும்பத்தினருடன் ஜாலியாக ரைடு சென்ற காட்சிகளையும் இணைத்துள்ளார்.   ஜிபி முத்து வாங்கியுள்ள காரின் விலை ரூ.12 முதல் 15 லட்சம்  என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web