தமிழகம் முழுவதும் 41,485 பேர் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வு எழுத வருகை!

 
தேர்வு

தமிழகம்  முழுவதும்  2058 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் இன்று நடத்தப்படுகின்றன. இதற்கான  அறிவிப்பு  அக்டோபர் 2023ல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில்  டிசம்பரில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. ஜனவரி 7ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட இருந்த நிலையில்   புயல் காரணமாக தேர்வு இன்றைக்கு,  ஒத்தி  வைக்கப்பட்டது. இன்று நடக்கும் கட்டாய தமிழ் தகுதி தேர்வில் 40% மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே முக்கிய  தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கட்டாய தமிழ் தகுதி தேர்வில் விலக்கு அளிக்க கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.

டிஎன்பிஎஸ்சி

இந்த தேர்வு எழுத வகை செய்யும் அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரியும்   மனுக்கள் அளிக்கப்பட்டு அவை  விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களின் மீதான விசாரணையில்   தமிழ் மொழி தெரியாதவர்கள் பணி நியமன தேதியில் இருந்து  2 ஆண்டுக்குள் மொழி தேர்வில் தேர்ச்சி பெற சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்திற்கு பிறகு வெவ்வேறு பணிகளுக்கான  3 தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன.  புயல் மழையால் இந்த தேர்வுகள் ஜனவரி 7ம் தேதியிலிருந்து பிப்ரவரி  4ம் தேதிக்கு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என வாதிட்டார். 

டிஎன்பிஎஸ்சி


இதனை அடுத்து மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஓர் ஆண்டுக்கு மேலாக சட்ட திருத்தம் அமலில் இருந்தும் தேர்வு அறிவிப்பு வெளியிட்ட பின்னும் நீதிமன்றத்தை நாடவில்லை.   கடைசி நேரத்தில் மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க இயலாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் 4485 பேர் இந்த தேர்வை  எழுதுகின்றனர். இந்த நேரத்தில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிப்பது தேர்வு நடைமுறைக்கு இடையூறு செய்வதாகிவிடும். மனுதாரர்களின் கோரிக்கையை அரசுதான் பரிசீலிக்க வேண்டும். மனுதாரர்கள் தேர்வு எழுதலாம். அரசு தரப்பில் மார்ச் 7க்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மனுக்களின் மீதான  விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web