நாளை தமிழகம் முழுவதும் 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டம்.... முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

 
கிராம சபை கூட்டம்
 

தமிழ்நாட்டில் நாளை  அக்டோபர் 11 (சனிக்கிழமை) அன்று, மாநிலம் முழுவதும் 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்று ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். காந்தி ஜெயந்தி (அக். 2) அன்று நடைபெற வேண்டிய கூட்டங்கள் இந்த நாளுக்குப் மாற்றப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த கிராம சபைகளை காணொலி மூலம் நேரடியாக தொடங்கவுள்ளார்.

கிராம சபை கூட்டம்

இந்த கூட்டங்களில் தண்ணீர், தெருவிளக்குகள், சாலை வசதி, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் குறித்து மக்கள் கருத்துகளை தெரிவித்தால், அவை உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது "நம்ம ஊரு நம்ம அரசு" திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

கிராம சபை கூட்டம்

முக்கியமாக, சாதிப் பெயர்கள் அல்லது இழிவுபடுத்தும் பெயர்களைக் கொண்ட தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் போன்றவற்றின் பெயர்களை மாற்றுவது குறித்த ஆலோசனைகளும் இக்கூட்டங்களில் இடம்பெறும். இதுவரை எண்ணிமிக்க சமூக அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த இந்த கோரிக்கைக்கு அதிகாரப்பூர்வ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. மேலும், நலிவடைந்த குடும்பங்களுக்கான நிதி உதவிகளும் இந்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானிக்கப்பட உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?