பெரும் சோகம்... 70 வருட போராட்டம்... மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள்... உலக மக்களை உற்சாகப்படுத்திய இரும்பு நுரையீரல் மனிதன் காலமானார்!

பெரும் சோகம்... 70 வருட போராட்டம்... மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள்...  உலக மக்களை உற்சாகப்படுத்திய இரும்பு நுரையீரல் மனிதன் காலமானார்!

சிறுவயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரும்பு நுரையீரலுடன் கடந்த 70 வருடங்களாக வாழ்ந்து வந்த பி.ஆல். அலெக்சாண்டர், தனது 78வது வயதில் அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் மருத்துவமனையில் காலமானார். அலெக்சாண்டர் காலமானவதை அவரது நீண்டகால நண்பரான டேனியல் ஸ்பிங்க்ஸ் அறிவித்துள்ளார். 

பெரும் சோகம்... 70 வருட போராட்டம்... மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள்...  உலக மக்களை உற்சாகப்படுத்திய இரும்பு நுரையீரல் மனிதன் காலமானார்!
சமீபத்தில் அலெக்சாண்டர் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. 

அலெக்சாண்டர் சுயமாக சுவாசிக்க தன்னைப் பயிற்றுவித்துக் கொண்டார். சட்டப்படிப்பு படித்து, வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையைப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை உருவாக்கினார். உலகம் முழுவதும் தனது நேர்மறையான கண்ணோட்டத்தால் மக்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். 

பெரும் சோகம்... 70 வருட போராட்டம்... மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள்...  உலக மக்களை உற்சாகப்படுத்திய இரும்பு நுரையீரல் மனிதன் காலமானார்!

தனது 6 வது வயதில் 1952 ல் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட அலெக்சாண்டர் , அதன் பின்னர், கழுத்தில் இருந்து உடல் முழுவதுமாக செயலிழந்தார். அதன் பின்னர், சுவாசிப்பதற்காக அவர் ஒரு இரும்பு நுரையீரலைப் பயன்படுத்தத் தொடங்கினார். அறையிலுள்ள காற்றழுத்தம் அவரது நுரையீரலுக்கு உள்ளேயும், வெளியேயும் காற்றை வலுக்கட்டாயமாக உட்செலுத்தி வந்தது. தனது டிக்டாக் கணக்கில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளார்.

“அவர் இந்த உலகின் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒருவர்" என்று பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அலெக்சாண்டரின் நேர்மறை எண்ணம் அவரைச் சுற்றியுள்ளவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நண்பர்கள் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

பெரும் சோகம்... 70 வருட போராட்டம்... மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள்...  உலக மக்களை உற்சாகப்படுத்திய இரும்பு நுரையீரல் மனிதன் காலமானார்!

தன்னுடைய கழுத்துக்கு உடல் முழுவதும் செயல்படாத நிலையில், வாயில் ஒரு குச்சியைப் பயன்படுத்தி, அலெக்சாண்டர் கணினியில் தட்டச்சு செய்து,  தொலைபேசியைப் பயன்படுத்தினார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர். வயதாகும் போது அலெக்சாண்டருக்கு நுரையீரலுக்கு வெளியே சுவாசிப்பதில் அதிக சிரமங்கள் இருந்தன" என்றார்கள். 

கல்லூரி காலத்திலிருந்தே அலெக்சாண்டருடன் நட்பாக இருந்த கேரி காக்ஸ், தனது நண்பர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார். தனது வாழ்வின் இறுதி காலம் வரையில் அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார் என்றார். 

அலெக்சாண்டர் தனது வாழ்க்கையைப் பற்றி எழுதிய, Three Minutes for a Dog: My Life in an Iron Lung", 2020 ல் வெளியிடப்பட்டது. அலெக்சாண்டரின் தாதி அவர் சிறுவனாக இருந்தபோது அவருக்கு அளித்த வாக்குறுதியில் இருந்து தலைப்பு வந்ததாக கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web