பெரும் சோகம்.. கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து.. கோர விபத்தில் 3 பேர் பலியான சோகம்!
சீர்காழி அருகே வேகமாக வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.நெய்வேலியில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, கதிராமங்கலம் கடை வீதியில் முந்தைய வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது வலதுபுறம் சென்ற 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கதிராமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஜெயசீலன், அலவேலி கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த வைதீஸ்வரன் கோவில் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!