பெரும் அதிர்ச்சி.. ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்.. கோர விபத்தில் 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி!

 
முகில் நிவாஷ் , கால்பந்து வீரர் தர்மேஷ், ரோகித்

ஈரோடு மாவட்டம் வடவள்ளி முருகன் கோவில் அருகே வளைவில் வேகமாக வந்த கார், கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. அப்போது பின்னால் வந்த மற்றொரு கார் விபத்துக்குள்ளான கார் மீது மோதியது. இதில், காரின் பின்னால் வந்த மற்றொரு காரும் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முகில் நிவாஷ் (21), கால்பந்து வீரர் தர்மேஷ் (18), ரோகித் (18) ஆகிய 5 பேரில் 3 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து

மேலும் இருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலை

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!