பெரும் அதிர்ச்சி.. கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பரிதாப பலி!

 
மத்திய பிரதேசம்

சமீப காலமாக நாடு முழுவதும் கனமழை காரணமாக பல துயர சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் ஷாபூரில் உள்ள ஹர்தவுல் பாபா கோயிலின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர். ஷாபூரில் உள்ள பாபா கோவிலில் நடந்த மத விழாவின் போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இந்த ஆண்டு மட்டும் 200 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ரேவா மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!