பெரும் பதற்றம்... போருக்கு தயார்... அதிபர் கிம் ஜான் உத்தரவு... அதிர்ச்சியில் உலக நாடுகள்!

 
கிம் ஜங் உன்

உலக வரைப்படத்தின் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்திருக்கிறதென்றால், எட்டு திசைகளிலும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், போருக்கு தயார் நிலையில் இருப்பதாக அதிகப்ர் கிங் ஜான் அறிவித்துள்ளது உலக நாடுகளை பதற்றமடைய செய்துள்ளன. ஏற்கெனவே இஸ்ரேல் துவங்கி உக்ரைன், காசா வரையில் போர் பதற்றம் பொதுமக்களை பெரிதும் பாதித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. நீண்ட தூர ஏவுகணை சோதனை நடத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்திருந்த போதும், அதை கண்டுக்கொள்ளாமல் ஜப்பான் மற்றும் தென்கொரியா கடல் பகுதியில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

North Korea says it tested cruise missiles with 'super-large' warheads in  its latest weapons display | Arab News

இந்நிலையில், தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக கருதும் வடகொரியா, இதை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது. தாக்குதல் நடத்தினால் எதிரி நாடுகள் முற்றிலும் அழிந்து விடும் என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதைப் பொருட்படுத்தாத அந்த நாடுகள் மீண்டும் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இது வடகொரியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தென்கொரிய கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த பதற்றத்திற்கு மத்தியில் கிம் ஜாங் உன் நம்போவில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

North Korea tests more cruise missiles as leader Kim calls for war readiness

அங்கு ராணுவ வீரர்களிடம் பேசிய அவர், நாட்டின் கடல்சார் இறையாண்மையை பாதுகாப்பதிலும், போர் ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதிலும் கடற்படை முக்கிய பங்காற்றுகிறது. எனவே போருக்கான ஆயத்தங்களை விரைவுபடுத்துமாறு இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியா போருக்கு தயாராக இருப்பதாகவே அதிபர் கிம் பேசியுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web