பாகிஸ்தானில் கையெறி வெடிகுண்டு தாக்குதல்... 3 பேர் பலி, ஒருவர் படுகாயம்!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணம் கைபர் மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 7) இரவு குடியிருப்புப் பகுதிக்குள் திடீரென கையெறி வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. சம்பவம் அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நிகழ்ந்த பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, சம்பவம் குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

தாக்குதலின் பின்னணி குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. கடந்த 2024 ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
