மகன் இறந்த துக்கம் ... மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து கணவன் தற்கொலை!
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் வசித்து வருபவர் 47 வயது பூபதி. இவர் லாரி பாடி கட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி 37 வயது கலைச்செல்வி . இவர்களது மகள் 20 வயது மகேஸ்வரி.

இவர் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மகன் தினேஷ்குமார், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பலியானார். அதுமுதல் பூபதி மிகுந்த மனவேதனையில் போதைக்கு அடிமையாகி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அதிகாலை, பூபதி மகள் மகேஸ்வரியை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, கலைச்செல்வியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதன் பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
