டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே.... குரூப்1 உத்தேச விடைப்பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் அரசு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெறும் தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் துணை கலெக்டர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் தீயணைப்பு அலுவலர் உட்பட 90 காலி பணியிடங்களுக்கான குரூப்1 முதல் நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு மார்ச் மாதம் 18ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 27ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மொத்தம் உள்ள 90 பணியிடங்களுக்காக 2,38,247 பேர் போட்டி போடுகின்றனர்.
இந்நிலையில் குரூப் 1 மற்றும் ஒருங்கிணைந்த குரூப் 2 பி, சி முதல் நிலை தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உதவி ஆட்சியர், அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான இந்த தேர்வை 1.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்நிலையில் உத்தேச விடைகளில் ஆட்சேபனை இருந்தால் ஜூலை 30ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
