பெங்களூருவில் தொழிலதிபரை மிரட்டி ரூ.1½ கோடி பறித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள்... 34 செல்போன்கள் பறிமுதல்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொழில் அதிபரை மிரட்டி ரூ.1½ கோடி பறித்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு பையப்பனஹள்ளியை சேர்ந்தவர் கேசவ்தக். தொழில் அதிபரான இவர். கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அதிகாரிகள் என்று கூறி பெண் உள்பட 4 பேர் வந்து அவரை அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் கேசவ்தக்கிடம் உங்கள் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக உங்கள் மீது புகார் வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றால் ரூ.3 கோடி தரவேண்டும் என்று மிரட்டினர்.
#Bengaluru police arrested four #GST Intelligence officers who conducted ‘fake’ raids and extorted businessmen. The police claimed to have seized 32 mobile phones and 50 cheque books from the female officer 👇https://t.co/YYJFDAzJLZ
— TOI Bengaluru (@TOIBengaluru) September 12, 2024
The 4 GST officers are👇 pic.twitter.com/XpB01r2QEY
அதற்கு கேசவ்தக் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர்கள், கேசவ்தக்கை இந்திரா நகர் பகுதிக்கு காரில் கடத்தி சென்று தாக்கினர். பின்னர் அவரது நண்பர் ரோஷன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள் ரூ.3 கோடி எடுத்துவரும்படி மிரட்டினர். இதை கேட்ட ரோஷன், ரூ.1½ கோடியை எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கிய கும்பல் கேசவை கீழே இறக்கி விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.
இந்நிலையில் கும்பல் மீது சந்தேகம் அடைந்த கேசவ்தக், ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் எந்த சோதனையும் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறினர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் தன்னை ஏமாற்றியதை அறிந்த கேசவ்தக், இது குறித்து பையப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மத்திய ஜி.எஸ்.டி. அதிகாரிகளான சோனாலி சஹாயி, மனோஜ் சைனி, அபிஷேக், நாகேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கேசவ்தக் வீட்டிற்கு வாடகை காரில் சென்றதும். காரை வேறு ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு கேசவ்தக் வீட்டிற்கு சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

சுமார் 15 கி.மீ சாலையோரம் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி சோதனை செய்த போது அவர்கள் கேசவ்தக் வீட்டிற்கு வந்து சென்றது உறுதியானது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 34 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 50 காசோலை புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1½ கோடியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
