அடுத்த அதிர்ச்சி... அக்டோபர் 1 முதல் 30% நில வழிகாட்டி மதிப்பு உயர்வு!!

 
சொத்து பத்திரம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆவணங்கள் பதிவுத்துறை

கர்நாடக மாநிலத்தில் நிலப்பதிவு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்த செய்திக்குறிப்பில்  ”கர்நாடகத்தில் நிலப்பதிவு வழிகாட்டு மதிப்பு உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒவ்வொரு  ஆண்டும் நில பதிவு வழிகாட்டு மதிப்பு பரிசீலிக்கப்பட்டு  உயர்த்தப்பட வேண்டும் என விதிமுறைகளில் உள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக நில மதிப்பு  உயர்த்தப்படவில்லை.

பத்திரப்பதிவு

இதன் அடிப்படையில் தற்போது  எங்கெங்கு சந்தை மதிப்பை விட வழிகாட்டு மதிப்பு அதிகமாக உள்ளதோ, அங்கு இந்த உத்தரவு செயல்படுத்தப்படாது. ஆனால் சந்தை மதிப்பை விட வழிகாட்டு மதிப்பு மிக குறைவாக இருந்தால், அங்கு அதன் மதிப்பு உயரும்.குறிப்பாக நெடுஞ்சாலை, விமான நிலையம், தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ள பகுதிகளில் வழிகாட்டு மதிப்பு குறைவாக உள்ளது. அந்த பகுதிகளில் நில வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.  

பத்திரப்பதிவு


இதுகுறித்து ஆட்சேபம் தெரிவிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில்  இறுதியாக அரசாணை பிறப்பிக்கப்படும். இந்த நில வழிகாட்டி மதிப்பு உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2000  கோடி வருவாய் கிடைக்கும். இந்த உத்தரவு அமலுக்கு வந்த  உடன் உருவாகப்போகும் சில  குளறுபடிகள் 2 மாதங்களில் சரிசெய்யப்படும். இத்துடன் சொத்துக்கள் விற்பனை செய்வதில் கருப்பு பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை தடுக்க வேண்டியுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web