நாளை பள்ளிகள் திறப்பு.. வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...!!

 
மாணவிகள்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால்  தலைநகர்  சென்னை, உட்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மின்சாரம், மொபைல் நெட்வொர்க் எதுவும் இல்லாமல் கடும் பாதிப்புக்கள் உருவாகின. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு வாரம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் புத்தகங்கள் உட்பட அவர்களின் உடமைகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டன.  தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

தமிழக அரசு, பிரபலங்கள், தேசிய பேரிடர் மீட்பு படை,, தன்னார்வலர்களும் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனையடுத்து  மாணவர்களின் கல்வி கேள்விக்குறி ஆகியுள்ளது பாதிக்கப்பட்ட மாணவர்கள் நாளை பள்ளிகளில் கணக்கெடுக்கப்படுவார்கள் அவர்களுக்கு டிசம்பர் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை புத்தகங்கள், பை உட்பட தேவையான பொருட்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு டிசம்பர் 13ம் தேதி தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளிகள் செயல்பட வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மாணவிகள்

பள்ளிகளை திறக்க வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி

பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும்.

முட்புதர்கள் இருப்பின்  அகற்ற வேண்டும்.

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுற்றுச்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மாணவர்களை அருகில் செல்ல அனுமதிக்க கூடாது.

மழையால் பாதிக்கப்பட்ட வகுப்புகளை பயன்படுத்தக்கூடாது.

நிலைமை சீராகும் வரை  அந்த வகுப்பறைகளை  பூட்டி வைக்க வேண்டும்.

வகுப்பறைகள் சுத்தம்
இடிக்க வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் அவற்றை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டியது அவசியம்.  

வகுப்புகளில் உள்ள இருக்கைகளில் பூஞ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பள்ளிகளுக்கு தேவையான  அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் பள்ளி நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த உத்தரவு கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web