உஷார்.... இன்ஃபுளூயன்சா காய்ச்சலை கண்டறிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை கட்டுப்படுத்தவும் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் மத்திய மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்ஃபுளுவென்சா வகை காய்ச்சலை கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் லேசான காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் ஏ வகை. தீவிரக் காய்ச்சல், அதிக இருமல் என்ற பி வகை மற்றும் தீவிர காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி, ரத்த அழுத்த குறைவு இருப்பவர்கள் சி வகை என 3 பிரிவாக பிரிக்கப்படுகின்றனர்.ஏ மற்றும் பி வகையினருக்கு இன்ஃபுளுயன்சாவிற்கான பரிசோதனையோ, மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. சி வகை நோயாளிகள், அதாவது, இடைவிடாத தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருந்தால் RT PCR பரிசோதனை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவமனை, ஆய்வகங்களில் பணி புரிவோர் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். மேலும் ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!