120 வயதில் கின்னஸ் சாதனை படைத்த குஞ்சீரம்மா...!!

 
குஞ்சீரம்மா

கேரளத்தின் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியில் வசித்து வருபவர்  குஞ்சீரும்மா.  இவருக்கு வயது 120. இவர் தன்னுடைய 14 வயதில் திருமணமாகி, 13 குழந்தைகளை பெற்றெடுத்தார். அதில் 7குழந்தைகள் சிறிய வயதிலேயே உயிரிழந்தன. மீதம் உள்ள 8 பேரை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கியதில் இன்று ஆல் போல் தழைத்து 5வது தலைமுறை பேரன் பேத்திகளை பார்த்து விட்டார்.

குஞ்சீரம்மா

இவர் தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு காரணங்களாக கேரளத்தின் பாரம்பரிய முழுதானிய உணவு, முழு உழைப்பு, முழுமையான உறக்கம் இவைகளை தவறாமல் கடைப்பிடிப்பதாக  கூறியுள்ளார். அத்துடன்   எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் எப்போதும் சிரித்த முகத்துடன்  எதிர்கொள்பவர் குஞ்சீரும்மா, தனது வாழ்நாளில் பெரிதாக எதற்கும் கலங்கி கண்ணீர் விட்டதில்லை என கூறுகிறார்.  

காரைக்குடியில் கின்னஸ் சாதனை செய்த மாணவர்!குவியும் பாராட்டுக்கள்!

இந்த கின்னஸ் சாதனை பாட்டிக்கு, இன்று வரை காது, கண் உட்பட   புலன்கள் சரியாக வேலை செய்கின்றன. அத்துடன்  வயதானவர்களை தாக்கும் நீரிழிவு ரத்த அழுத்தம் போன்ற  எந்த பாதிப்புகளும் இல்லை எனக் கூறுகிறார். ஆனால்  முதுமையால் ஏற்பட்ட தள்ளாமை காரணமாக தற்போது சக்கர நாற்காலியில் வலம் வருகிறார்.    இளம் வயது முதல் பெரியவர்களால் கற்றுத் தரப்பட்ட இஸ்லாமிய மார்க்க கல்வியை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதையே நீண்ட ஆயுளுக்கு காரணமாகக் கூறுகிறார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web