மாத துவக்கத்திலேயே மகிழ்ச்சியான செய்தி... தங்கம் விலை குறைந்தது!

 
தங்கம்

இன்று மாதத்தின் முதல் தேதியிலேயே மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இன்றைய காலை நேர விலை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7,050க்கும், சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.56,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம்

அதே போன்று இன்று வெள்ளி விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.101க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,01,000க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

அமெரிக்க பெடரல் வங்கியும், ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து இருப்பதால்  சர்வதேச காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், இந்தியாவிலும்  நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து வரிசையாக பண்டிகை காலங்கள் தொடர்வதால் தங்கத்தின் விலையில் உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web