காதலர் தின ஸ்பெஷல்... ரோஜாப்பூக்கள் விலை 4 மடங்கு உயர்வு...!

 
ரோஜாக்கள்

நாளை மறுநாள் பிப்ரவரி 14ம் தேதி புதன் கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம்  அனுசரிக்கப்பட உள்ளது. இதற்காக  காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூக்கள்,  வாழ்த்து அட்டைகள், சாக்லெட்,  பொம்மைகள், மொபைல் போன்கள் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி  பரிசளிப்பர்.  மாறிவரும் இன்றைய சூழ்நிலையில்   மொபைல்போன்கள் மூலம் வாட்ஸ் அப், முகநூல் உட்பட   சமூக வலைதளங்கள் மூலம்  காதலர் தின குறுஞ்செய்தி, புகைப்படங்களை அனுப்பிக் கொள்கின்றனர்.

ரோஜா

இருந்தாலும் ரோஜாவுக்கான மவுசு இன்னும் குறையவே இல்லை.  ரோஜாப்பூ மற்றும் வாழ்த்து அட்டைகளை கொடுப்பது இப்போதும் பெருமையானதாகவே   கருதப்படுகிறது. இதனையடுத்து காதலர் தினத்தில்   ரோஜா பூக்கள் விலை உச்சத்தில் இருக்கும்.  காதலர் தினத்திற்காக  ஓசூரில் இருந்து கொண்டுவரப்பட்டு பல விதமான வண்ணங்0களில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.மேலும் காதலர்களுக்கு பிடித்தமான நிறங்களை அவர்கள் தேர்வு செய்யும் வகையில் ரோஜா பூக்கள் மீது வண்ண நிற ஸ்பிரே அடித்து அதன் புத்துணர்ச்சியை நீடிக்க வைக்கின்றனர் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக  இத்தந்திரத்தை உபயோகப்படுத்துகின்றனர்.

காதலர் தினம்

எல்லா வண்ணங்களிலும்  ரோஜா பூக்கள் கிடைப்பதால் இதை காதலர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.  பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு ரோஜா பூக்கள் வரத்து குறைந்துள்ளது .   காதலர் தினத்தையொட்டி தேவை அதிகரிப்பு காரணமாக ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web