செல்வம் நிலைத்திருக்க எந்த வகையான பிள்ளையார் வாங்கலாம்?

விநாயகர் முழு முதற்கடவுள். விக்னங்களை தீர்ப்பவர். சங்கடங்களை போக்குபவர். இவரே அனைவருக்கும் பிடித்த கடவுளாக அவதாரம் எடுத்துள்ளார். எந்த பொருளில் எப்படி பிடித்து எந்த உருவத்தில் வணங்கினாலும் விநாயகர் அருள் செய்வார் என்பதே இவரின் சிறப்பு.பிள்ளையார், விநாயகர், கணபதி, கணேசன் என பல்வேறு பெயர்களால் வணங்கி வரும் விநாயகர் தாய், தந்தையின் பேச்சைக் கேட்டு, அவர்களை மதித்து கீழ்படிந்து செயல்பட்ட பிள்ளை என்பதால் தான் இவரை பிள்ளையார் என்கிறோம். சிவ மற்றும் விஷ்ணு என அனைத்து ஆலயங்களிலும் முழு முதற் கடவுள் இவரே.
முழு முதற்கடவுள் விநாயகர் இவரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரம் அருளி நன்மைகள் வழங்குவார் என்பது ஐதீகம். நவக்கிரக தோஷம், சர்ப்ப தோஷம், சனிதோஷம் என எந்த வகையான தோஷமாக இருந்தாலும் சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் சகல விதமான சங்கடங்களும் நீங்கும்
களிமண், கல் மட்டுமல்ல பசு மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தாலும் அனைத்து வித நலன்களை அள்ளித் தருவார் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
களிமண் பிள்ளையார்- ஆரோக்கியம்
கருங்கல் பிள்ளையார்- காரிய சித்தி
விபூதி பிள்ளையார்- உஷ்ண நோய்களை தீர்ப்பார்.
குங்கும பிள்ளையார்- செவ்வாய் தோஷம் தீரும்.
சந்தன பிள்ளையார்- குழந்தைப் பேறு
உப்பு பிள்ளையார்- பகைவர்களிடமிருந்து காப்பார்.
வெல்லப் பிள்ளையார்- உடலில் உள்ள கொப்பளங்கள் மறையும்.
சர்க்கரைப் பிள்ளையார்- வீட்டில் இனிமையான தருணங்கள்
மஞ்சள் பிள்ளையார்- சகல செளபாக்கியங்கள்
பசுஞ்சாணப் பிள்ளையார்- தோஷங்கள் நீங்கும்.
வெள்ளெருக்கு பிள்ளையார்- பில்லி சூனியம் அகலும்.
வாழைப்பழ பிள்ளையார்- கணவன் – மனைவி ஒற்றுமை பலன்களை அறிந்து, அதற்கேற்ப செய்யப்பட்ட விநாயகரை வழிபடுவோம்.
விநாயகருக்கான காயத்ரி மந்திரம் :
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்’
ஓம் விநாயகா போற்றி!
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!