பிரபல பின்னணி பாடகர் வீரமணிதாசனுக்கு 'ஹரிவராசனம்' விருது!

 
வீரமணிதாசன்

கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் வாரியமும் இணைந்து ஒவ்வொரு வருடமும் சபரிமலையில் மகரஜோதியன்று ஹரிவராசனம் விருது வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வருடத்தின் ஹரிவராசனம் விருது பிரபல பின்னணி பாடகர் வீரமணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

வீரமணிதாசன்
நேற்று மகரஜோதியை முன்னிட்டு சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்ற விழாவில், இந்த வருடத்திற்கான 'ஹரிவராசனம்' விருதை பாடகர் வீரமணிதாசனுக்கு கேரளா தேவசம் துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார். ஹரிவராசனம் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் பாடகர் வீரமணிதாசனுக்கு வழங்கப்பட்டது.

வீரமணிதாசன்
பாடகர் வீரமணிதாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது குரலில் ஒலிக்கும் "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை..." பாடல் தமிழக ஐயப்ப பக்தர்களின் ஆன்மாவை வருடும் பரவசமான பாடலாகத் திகழ்கிறது.

 தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web